இலங்கை விமானப்படை அணியினரை வீழ்த்திய புனித மிக்கேல் கல்லூரி அணி!!

இலங்கை விமானப்படை அணியினருக்கும் புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவ அணியினருக்குமிடையில் இடம் பெற்ற கூடை பந்தாட்ட போட்டியில் புனித மிக்கேல் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.

புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அக்கல்லூரின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக 06 அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 23 மற்றும் 24 திகதிகளில் இடம்பெற்றுள்ளது.

பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் இயேசு சபை துறவிகளின் மேலாளர் அருட்தந்தை சகாயநாதன் அடிகளாரின் தலைமையில் கல்லூரியின் ஹெபர்ட் கூடைப்பந்தாட்ட உள்ளக அரங்கில் இக் கூடைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் இரண்டு நாட்களாக இடம் பெற்றுள்ளன.

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் அன்ரனி பெணடிக் ஜோசப், சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத், பழைய மாணவர் சங்க உப தலைவர் அருட்தந்தை றொசான் அடிகளார், அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் உற்பட பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இப்போட்டித் தொடரின் இறுதி போட்டி கடந்த (24.09) திகதி இடம்பெற்றதுடன், விமானப்படை அணிக்கும் புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவ அணிக்குமிடையில் விறுவிருப்பான போட்டியாக அமைந்தது.

இறுதிப்போட்டியில் புனித மிக்கேல் கல்லூரியின் அணியினர் 04 புள்ளிகளால் வெற்றியினை தமதாக்கிக்கொண்டனர்.

இப்போட்டியின் சிறந்த வீரருக்கான விருதினை புனித மிக்கேல் கல்லூரி அணியின் வீரர் விதுசன் பெற்றுக் கொண்டார். அத்துடன், சுற்றுப்போட்டியின் 3 ஆம் இடத்தினை கண்டி மாவட்ட அணியினர் சுவீகரித்துக் கொண்டனர். மேலும் போட்டியில் பங்கு பற்றுவதற்காக பல மாவட்டங்களில் இருந்து முன்னணி கூடைப்பந்தாட்ட அணியினர் வருகை தந்திருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version