கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பது தனது சிறப்புரிமையினை மீறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தன் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் தெரிவித்துள்ளமை பாராளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறும் செயற்படு என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் “பாரளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மட்டக்களப்பு காணி அபகரிப்பு தொடர்பில் பிழையான முறையில் மற்றவர்களை வழிநடத்துகிறார்” என தெரிவித்தது தொடர்பிலேயே சாணக்கியன் இந்த கருத்தை வெளியிட்டுளார்.
.சாணக்கியன் MP குறித்த விடயம் தொடர்பில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“கிழக்குமாகாண ஆளுனர் எனது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறி என் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார் அதனை ஊடகங்களிலும் வெளிப்படுத்தியுள்ளார். நாட்டின் பாராளுமன்ற விழுமியங்களை மதிக்காது செயல்ப்பட்ட ஆளுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இது முதல் முறை அல்ல பல முறை எனக்கு நடந்துள்ளது இளம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எதிர்கால உறுப்பினர்களின் நலன் கருதி இவ்வாறான விடயங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க நான் இக் கோரிக்கையை முன்வைக்கின்றேன். அது மட்டுமல்ல இவரின் தலையீடானது சட்டவிரோத காணி அபகரிப்பு முதன் மட்டக்களப்பு மாநகர சபை வரை தொடர்கின்றது”.