வடக்கு ஈராக்கில் திருமண நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தீவிபத்தில் பலியானவர்களில் மணமகனும், மணமகளும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகிறது.
தீவிபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையல், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.