ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வீர வீராங்கனைகள் நேற்றும்(26.03) போட்டிகளில் பங்குபற்றினர். இருப்பினும் பதக்கங்களை பெறுமளவுக்கு அவர்கள் பிரகாசிக்காவில்லை.
ஜிம்னாஸ்டிக் போட்டிகளால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற நதில நெத்விரு 17 ஆவது இடத்தில நிறைவு செய்து கொண்டார். நடைபெற்ற 6 சுற்றுகளில் 70.065 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டார். இந்தப் போட்டியில் முதலிடத்தை பெற்றுக்கொண்ட சீன வீரர் 89.299 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டார்.
200 m பெண்களுக்கான பிற்புற(Backstroke) நீச்சல் போட்டியில் கங்கா செனவிரட்ன தெரிவுகாண் போட்டியில்(ஹீட்ஸ்) ஐந்தாமிடத்தை பெற்றுக் கொண்டார். 26.37 செக்கன்களில் இந்த தூரத்தை அவர் நீந்தி முடித்தார்.
ஆண்களுக்கான 51-57Kg எடைப்பிரிவில் குத்துச்சண்டைப் போட்டியில் ஈடுபட்ட ருக்மல் பிரசன்ன 32 பேரடங்கிய சுற்றில் பங்களாதேஷ் வீரரிடம் 2-3 என தோல்வியடைந்தார்.
Dinghy – ILCA4 ரக படகோட்ட பெண்களுக்கான போட்டியில் ரால்யா ரஞ்சல் ஐந்தாமிடத்தையும், ஆண்களுக்கான போட்டியில் தரேன் நாணயக்கார 11 ஆம் இடத்தையும் பெற்றனர்.
ரக்பி போட்டியில் நேபாளம் அணியை இலங்கை அணி 68-0 என வெற்றி பெற்றது. மற்றுமொரு போட்டியில் தாய்லாந்து அணியிடம் 7-10 என தோல்வியை சந்தித்துள்ளது. முதற் பாதியில் இலங்கை அணி 7-5 என்ற முன்னிலையைப் பெற்று பின்னரே தோல்வியடைந்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனா தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்று 27 ஆம் திகதி பிற்பகல் 2.30 வரை 65 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக 114 பதக்கங்களை வென்றுள்ளது. தென் கொரியா இரண்டாமிடத்தையும், ஜப்பான் மூன்றாமிடத்திலும் காணப்படுகின்றன. இந்தியா ஆறாமிடத்தில் உள்ளது.
இலங்கை, மகளிர் கிரிக்கெட் போட்டியில் மாத்திரம் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது.