புலிகளின் தங்கம் மற்றும் ஆயுதத்தை தேடி தொடரும் அகழ்வுப் பணிகள்!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி மூன்றாவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிஸார், இராணுவத்தினர், குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் குறித்த அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

 குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் காலத்தில் தங்கம், ஆயுதம் உள்ளிட்ட பொருட்கள் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடந்த 25ஆம் திகதி அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இருப்பினும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் எவ்வித தடையங்களும் கிடைக்கப்பெறவில்லை.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version