மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு!

ஹட்டன் கல்வி வலயத்தால் கோட்டம் 2, 3ல் இருந்து தெரிவு செய்யப்பட்ட 13 பாடசாலைகளில் கல்வி பயிலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 180 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (28.09) மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியில் இதற்கான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இதில் ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3ல் மஸ்கெலியா சென். ஜோசப் கல்லூரி, இலக்கம் தமிழ் வித்தியாலயம், மவுசாகலை இல 1 தமிழ் வித்தியாலயம், புலூம்பீல்ட் தமிழ் வித்தியாலயம் மற்றும் பெயாலோவன் தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றைச் சேர்ந்த 54 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பல மாணவர்கள். பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு!
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version