இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பணிப்புரியும் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 45 முதல் 65 வயது வரையிலான பெண்கள் ஆபத்தில் உள்ளனர் என்றும் பணிபுரியும் பெண்கள் மிகக் குறைந்த மட்டத்திலேயே சோதனைக்கு செல்வதாகவும் கூறியுள்ளார்.  

இதனால் இந்த நிலைமை மோசமாகியுள்ளதாகவும் பதிவாகியுள்ள புற்றுநோயாளிகளில் 26 பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version