கூட்டமாக ரயிலில் மோதிய யானைகள் – மூன்று யானை பலி!

காங்கசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலில் காட்டு யானைகள் கூட்டம் மோதியதில் மூன்று காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று (27.09) இரவு 11.50 மணியளவில் கல்கமுவ நகருக்கு அருகில் குறித்த மூன்று காட்டு யானைகளும் புகையிரதத்துடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் ரயிலின் இயந்திரத்தின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தினால் ஏற்பட்ட ஒருமணி நேர தாமதத்தின் பின்னர் புகையிரதம் கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த யானைகள் தொடர்பில் கல்கமுவ யானை கட்டுப்பாட்டு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version