தேசிய முகாமுக்கு தெரிவான நுவரெலியா வீரர்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு

இலங்கை கிரிக்கெட் ஏற்பாடு செய்துள்ள தேசிய இளைஞர் தகுதி முகாமைத்துவம் – 2023 போட்டியில் நுவரெலியா மாவட்ட 19 வயதிற்கு உட்பட்ட அணி பட்டியலில் தமிழ் பேசும் வீரர்கள் அறுவர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களை ஊக்குவிக்கும் முகமாக நேற்று(28.09) தனது பிறந்த நாளை கொண்டாடிய பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

நுவரெலியா திருத்துவது கல்லூரி, கொட்டகலை தேசிய பாடசாலை, மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரி, ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி ஆகியவற்றில் இருந்து 6 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட கடினப் பந்து அணிக்கு தெரிவாகி உள்ளனர்.

இந்த மாணவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார், அவர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்திய அதேவேளை விளையாட்டு உபகரணப் பொதிகளையும் கையளித்தார்.

தேசிய முகாமுக்கு தெரிவான நுவரெலியா வீரர்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version