எதிர்வரும் ஒக்டோபர் 01ம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் குழந்தைகளுக்கான இலவச நுழைவு வழங்கப்படவுள்ளது.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
உலக சிறுவர் தினதன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மிருகக்காட்சிசாலைக்கு வருகை தரும் சிறுவர்கள் பங்கேற்கும் வகையில் பல கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்காக மேலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் தேசிய விலங்கியல் துறை தெரிவித்துள்ளது.