பாகிஸ்தான், பலோசிஸ்தான் மாகாணத்தில் தற்கொலை குண்டு தாக்கல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாஸ்டங் மாவட்டத்தின் மதீனா பள்ளிவாசலுக்கு அருகில் மீலத் நபி விழாவை கொண்டாடுவதற்காக மக்கள் கூடிய இடத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த மாவட்டத்தின் உதவி பொலிஸ் அசத்தியஸ்தர்(DSP) கொல்லப்பட்டுள்ளதாகவும், அவரின் வாகனத்துக்கு அருகிலேயே குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பில் எவரும் உரிமை கோராத நிலையில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு பலோசிஸ்தான் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் உல் விவகார அமைச்சர் இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துளளார்.