தலைமைப்பொறுப்பிலிருந்து விலகத் தயாராகும் மஹிந்த

தான் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை பதவியில் நீடிக்க மாட்டேன் எனவும், இளைஞர் ஒருவருக்கு அந்த பதவியை வழங்க தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

களனி ராஜபமாகவிகாரைக்கு இன்று(29.09) சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் அவரின் உடல் நலம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. தான் நலமாக இருப்பதாக தெரிவித்த அவர், சமூக வலைத்தளங்களில் இவ்வாறு பகிரப்படும் விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கத்தேவையில்லை எனவும் மேலும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ உடல் நலம் குறைவாக காணப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டன்ன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version