ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு சாதகமான நாள்

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லக்கூடிய வாய்ப்புகள் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன. தடகளப் போட்டிகளில் மூவர் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ளனர்.

பெண்க்ளுக்கான 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் நதீஷா ராமநாயக்க இரண்டாவது தெரிவுக்காண் போட்டியில்(ஹீட்) 52.67 செக்கன்களில் ஓடி இரண்டாமிடத்தை பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். சகல தெரிவுகாண் போட்டிகளிலும் இது மூன்றாவது சிறந்த நேரப்பெறுதியாகும். இதனால் நதீஷாவுக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்காலம்.

ஆண்களுக்கான 400 மீட்ட தெரிவுகாண் ஓட்டப் போட்டியில் காலிங்க குமாரகே 45.57 செக்கன்களில் ஓடி முதலிடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். மொத்த நேரப்பெறுதிகளில் ஜப்பான் வீரர் புகோ சட்டோவின் நேரத்தை விட 0.01 செக்கன்களே குறைவாக காணப்படுகின்றார். இதனால் இவருக்கு நிச்சயம் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளது.

மற்றுமொரு ஆண்களுக்கான 400 மீட்ட தெரிவுகாண் ஓட்டப் போட்டியில் அருண தர்ஷன 46.07 செக்கன்களில் ஓடி மூன்றாமிடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

இவர்கள் நாளை(30.09) நடைபெறவுள்ள இறுதிப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.

கோல்ப் போட்டிகளில் இலங்கைக்கு இன்று 13 ஆவது இடமே கிடைத்தது.

இன்று இரவு 8.00 மணி வரையான நேரப்பகுதியில் சீனா 93 தங்கப்பதக்கங்களுடன் 173 பதக்கங்களை வென்று முதலிடத்தில் காணப்படுகிறது. இரண்டாமிடத்தை தென் கொரியா தக்க வைத்துள்ளது. ஜப்பான் மூன்றாமிடத்தில் காணப்படுகிறது. ஆறாவது இடத்தில் காணப்பட்ட இந்தியா இரண்டு இடங்கள் முன்னேறி நான்காமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

பதக்கப்பட்டியல்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு சாதகமான நாள்

Social Share

Leave a Reply