பிள்ளைகளை வளர்க்க வேண்டிய விதத்தை கற்பிக்கும் நாமல்!

நாட்டின் பழைய அல்லது நவீன தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாட்டின் தற்போதைய கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“கலாச்சாரத்தை மதிக்கும் பிள்ளைகளை சமுதாயத்திற்கு விட்டுச் செல்வது பெற்றோரின் பொறுப்பு. சிங்களம், தமிழ், முஸ்லீம், பர்கர் என எந்த கலாச்சாரத்திற்கும் ஏற்றவாறு குழந்தைகளை உருவாக்க வேண்டும். அது பெற்றோர்களாகிய நமது கடமையும் பொறுப்பும் ஆகும். முஸ்லீம் குழந்தை முஸ்லீம் கலாசாரத்திற்கு ஏற்ற உடை அணிவதற்கும், தமிழ் இளைஞன் வேட்டி அணிவதற்கும், சிங்கள சாரம் அணிவதற்கும் வெட்கப்படக்கூடாது. கலாச்சாரம் மற்றும் மதத்தை மதிக்கும் சமூகத்தின் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான பலன்களை நாம் அடைய முடியும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply