உலகக்கிண்ண தொடரின் பயிற்சிப் போட்டிகள் இன்று இந்தியாவில் ஆரம்பித்தன . இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்குமிடையில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் பங்களாதேஷ் அணி 07 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. மறுமொரு போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிராக அதிரடியாக துடுப்பாடி நியூசிலாந்து அணி 05 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 345 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. மொஹமட் ரிஷ்வான் 103 ஓட்டங்களையும், பபர் அஸாம் 80 ஓட்டங்களையும், சௌட் ஷகீல் 75 ஓட்டங்களையும் பெற்றனர். மிட்செல் சென்ட்னர் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 43.4 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 346 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. இதில் ரவீன் ரச்சின்ட்ரா 97 ஓட்டங்களையும், டெரில் மிட்செல் 59 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 54 ஓட்டங்களையும், மார்க் சப்மன் 65 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் உஸ்மா மிர் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து போட்டியும் மழையால் பாதிக்கப்பட்து.