பதவி விலகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா, மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபப்பட்ட ஐந்து வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார். அதற்கு ஆலோசனை பெறுவதற்காகவே சட்ட மா அதிபரை தானாக வந்து சந்தித்தார் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஊடகமொன்றுக்கு தெரிவித்துளளார்.
அவரின் பதவி விலகல் தொடர்பில் விசாரணை செய்த போது தானாகவே வந்து சட்ட மா அதிபரை சந்தித்துள்ளார் என்ற விடயமும் மேலும் இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அத்தோடு ஒரு வாராத்துக்கு முன்னர் கொழும்புக்கு வருகை தந்து தனது கரை விற்றுள்ளார் எனவும் மேலும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் ஒரு நீதிபதி. அவருக்கு அச்சுறுத்தல் இருந்திருப்பின் அவர்களை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளதென மேலும் நீதியமைச்சர் தெரிவித்துளளார்.