மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

8 மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், காலி மாவட்டத்தின் நெலுவ, எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, இங்கிரிய, வல்லவிட்ட, புலத்சிங்கள, அகலவத்தை, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே, கோரளை ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் அதுரலிய, முலட்டியன, பிடபெத்தர, கொட்டபொல, இரத்தினபுரி மாவட்டம், கலவான, அயகம, அஹெலியகொட, இரத்தினபுரி, குருவிட்ட, பல்மடுல்ல, நிவித்திகல, கிரியெல்ல, அலபத, இம்புல்பே, கொலொன்ன ஆகிய பகுதிகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல, கேகாலை மாவட்டத்தில் கேகாலை, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல, தெரணியகல, தெஹியோவிட்ட மற்றும் மாத்தளை மாவட்டத்தின் யடவத்தை ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version