எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வெலிகம பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.