பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு!

வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பாதுகாப்பு இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி திரு. நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சார்ஜன்ட் இன்று (30.09) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஏறூர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய திருமணமான உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா மேலும் தெரிவிக்கையில்,

“வெலிகந்த பொலிஸ் நிலைய படைமுகாமில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இந்த மரணம் ஏதேனும் விபத்தா அல்லது தற்கொலையா என்பது தெரியவில்லை. பிரதேச குற்றப் புலனாய்வு நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியாது” எனவும் தெரிவித்துள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version