இலங்கை பூப்பந்தாட்ட வீரர் நிலுக்க கருணாரட்ன ஓய்வு

இலங்கையின் முன்னணி பூப்பந்தாட்ட வீரராக கருதப்படும் நிலுக்க கருணாரட்ன தான் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று(01.10) அறிவித்துள்ளார். 2000 ஆம் ஆண்டு ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய சம்பியன்ஷிப் போட்டிளில் 15 வயதில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து களமிறங்கிய நிலுக்க 23 வருடங்களாக இலங்கைக்காக ஒலிம்பிக் போட்டிகள் அடங்கலாக பல்வேறுபட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார்.

“நாட்டுக்காக கவர்ச்சிகரமாக, தொடர்ச்சியாக சிறந்த பெறுதிகளோடு 22 வருடங்களாக விளையாடியுள்ளேன். சுய ஒழுக்கத்துடன், துணிவோடும் ஆர்வத்துடனும் எனது நாட்டுக்காக விளையாடியுள்ளேன்” என தனது ஓய்வு அறிவிப்பில் நிலுக்க கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

மூன்று தடவைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய நிலுக்க 2012 ஆம் ஆண்டு இலங்கை ஒலிம்பிக் அணிக்கு தலைமை தங்கியிருந்தார். லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் முதல் சுற்றில் ஜப்பானின் முதலிட வீரரும், சர்வதேச எட்டாமிட வீரரையும் வீழ்த்தி முன்னோடி காலிறுதி வரை முன்னேறினார். 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிளில் பங்குபற்றியுள்ள நிலுக்க, சர்வதேச தரப்படுத்தல்களில் 34 ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட ஒரே வீரராக காணப்படுகின்றார்.

2003 ஆம் ஆண்டு நவம்பர் 06 ஆம் திகதி தனது தகப்பனும், பயிற்றுவிப்பாளரும் முன்னாள் பட்மின்டன், முதற் தர கிரிக்கெட் மற்றும் நீச்சல் வீரருமான லூயி கருணாரட்னவின் பிறந்த நாளில் முதல் இறுதிப் போட்டியில் விளையாடினர். அதனை தான் பெருமையாக நினைப்பதாகவும், தன் தந்தை விளாடியதனை பார்த்தே தான் பட்மின்டன் போட்டிகளில் விளையாட ஆரம்பித்ததாகவும் பெருமை கொள்கிறார். 2011 ஆம் ஆண்டு தகப்பனின் பிறந்த நாளிலேயே முதல் சர்வதேச தங்கப்பதக்கத்தையும் அவர் வெற்றி பெற்றுள்ளார். தந்தையை போன்ற தனயன் என தகப்பனுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த வருடம் பெப்ரவரி மாதம் போர்த்துக்கல்லில் நடைபெற்ற தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடிய நிலுக்க எதிர்கால சந்ததியினர் தொடர்ந்தும் தம்மை தயார் செய்து போட்டிகளில் விளையட வழி விடவேண்டும் என்ற காரணத்தினால் தான் விலகுவதாக அறிவித்த அவர், இரண்டு வருடங்களுக்கு முன்னர் 17 ஆவது தேசிய சம்பியன்ஷிப் வெற்றியினை பெற்றதன் பின்னர் உள்ளூர் போட்டிகளில் பங்குப்பற்றுவதனை நிறுத்திவிட்டார். இனைஞர்களுக்கு வாய்ப்பை வழங்கவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். தான் நீண்ட காலமாக விளையாடுவதாக பலர் நினைப்பதாகவும், தான் சிறிய வயதிலேயே விளையாட வந்தமையினால் அவ்வாறு தோன்றுவதாகவும் அவர் தெரிவித்துளளார்.

சர்வதேச தரத்தில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய 09 தங்கப்பதக்கங்களையும், 8 வெள்ளிப்பதக்கங்களையும், 17 வெண்கலப் பதக்கங்களையும் நிலுக்க வெற்றி பெற்றுள்ளார்.

நிலுக்க கருணாரட்ண, இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரட்னவின் அண்ணன் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கை பூப்பந்தாட்ட வீரர் நிலுக்க கருணாரட்ன ஓய்வு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version