உயர்தர மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகள் விரைவில் ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தொழிற்பயிற்சி நெறிகள் இவ்வருடம் உயர்தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள பயிற்சி நிலையங்களில் இந்தப் பாடநெறிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காகவே இந்தத் தொழிற்பயிற்சி நெறிகள் நடத்தப்படும் எனவும், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த கற்கை நெறியை தொடர இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version