‘ஒரே நாடு ஒரே சட்டம்’ – தமிழ் உறுப்பினர்கள் நியமனம்

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திரு.ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் திரு.ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர.

அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற சட்ட வரைபுக்கான பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியில் ஏற்கெனவே 13 உறுப்பினர்கள் நியமனம் பெற்றிருந்த நிலையில், அதிலிருந்து பேராசிரியர் தயானந்த பண்டா மற்றும் விரவுரையாளர் மொஹமட் இப்திகாப் ஆகியோர் பதவி விலகியிருந்தனர்.

இந்நிலையில், புதிதாக 3 தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, உறுப்பினர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்வத்தப்பட்டுள்ளது.

'ஒரே நாடு ஒரே சட்டம்' - தமிழ் உறுப்பினர்கள் நியமனம்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version