நாம் – 200′ நிகழ்வின் அறிமுகவிழாவும், சின்னம் வெளியீடும்

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம்மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டியும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் ‘நாம் – 200’ நிகழ்வின் அறிமுகவிழாவும், சின்னம் வெளியீடும் இன்று (05.10) நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில், பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், இந்திய உயர்ஸ்தானிக்கராலயத்தின் விசேட பிரதிநிதியாக எல்டோஸ், அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் உட்பட அதிகாரிகள், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் உட்பட அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்கள், பெருந்தோட்ட கம்பனிகளுடைய நிறைவேற்று அதிகாரிகள், வர்த்தக பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம்மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டியும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்பட்டுள்ள ‘நாம் – 200’ திட்டமானது, மலையக பெருந்தோட்ட மக்களின் கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் அமையவுள்ளது.

நாம் - 200' நிகழ்வின் அறிமுகவிழாவும், சின்னம் வெளியீடும்

இலங்கையில் தமிழர்கள் என்றதும் வடக்கு கிழக்கு தமிழர்களை மட்டுமே எல்லோரும் தமிழர்களாக கருதுவதாகவும், மலையக தமிழர்களும் அதற்குள் அடங்க வேண்டும் எனவும் ஆனால் இங்கே அவ்வாறான நிலை இல்லை எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது உரையில் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வு ஏன் என பலர் கேள்வியெழுப்புவதாக தெரிவித்த ஜீவன், மலையயை மக்ளுக்கான ஒரு அடையாளமாக இந்த நிகழ்வு அமையுமென தனது உரையில் கூறினார். மலையக மக்கள் 15 இலட்சம் பேர் இலங்கையில் வாழ்கின்றனர். இவர்களில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே தோட்ட தொழிலார்களாக வாழ்கின்றனர். ஏனையோர் பல உயர் பதவிகளில், உயர் நிலைகளில் காணப்படுகின்றனர். கடந்த வருடங்களில் நாம் முன்னேற்றங்களை அடைந்து விட்டோம்” எனவும் ஜீஎவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

“26 வயதில் பாராளுமன்றம் சென்றேன். கடந்த காலங்களில் நாட்டின் நிலை காரணமாக மக்களுக்கு எதுவும் செய்யமுடியவில்லை என அதிருப்தியடைந்தேன். தற்போது 28 வயது. அமைச்சராக தற்போது பதவி வகிக்கிறேன். இனி வரும் காலங்களில் மக்களுக்காக வேலை செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

எமது கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தில் 8000 மில்லியன் ரூபாய்களை மலையக உட்கட்டமைப்புக்காக வழங்க சம்மதம் வழங்கியுள்ளார். கடந்த காலங்களில் 3000 மில்லியன் ரூபாய்களில் வீட்டு கடன்களை கட்டவே 2500 மில்லியன் ரூபா முடிந்து விட்டது” எனவும் தெரிவித்திருந்தார்.

வீடுகளை கட்டுவது மட்டுமல்ல அபிவிருத்தி. வருமானத்தை அதிகரித்து அவர்கள் சுயமாக வாழக்கூடிய நிலையை உருவாக்குவது, சமூக மேம்பாடு என்பனவே அபிவிருத்தி எனவும் ஜீவன் கூறினார்.

இந்த நிகழ்வுக்கு சகல மலையக தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த போதும், பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷை தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை எனவும், எமக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால் எவ்வாறு எம் மக்களின் முன்னேற்றுக்கு உழைக்க முடியுமெனவும் ஜீவன் தொண்டமான் கவலை வெளியிட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version