சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் விசேட குழு!

தற்போதைய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சரும், சசுகாதாரத் துறையுடன் தொடர்பான பல்வேறு நிறுவனங்களில் அவருக்கு நெருக்கமானவர்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் மோசடியான கொடுக்கல் வாங்கள் மற்றும் தற்போது சுகாதாரத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்களுக்கு இலவச, எளிதான,மற்றும் தரமான சுகாதார வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியினரால் விசேட குழுவொன்று நேற்று (05.10) ஸ்தாபிக்கப்பட்டது.

சுகாதார சீர்கேடு தொடர்பான மேலதிக தலையீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் எதிர்க்கட்சி ஒன்றியம் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடி கலந்துரையாடியது.

75 ஆண்டுகால ஜனநாயக வரலாற்றில்,இதுபோன்ற சுகாதாரப் பிரச்சினை நாட்டில் ஏற்பட்டதில்லை என்றும்,24 மணி நேரமும் திருட்டும் மோசடியும் நடந்து வருவதே இதற்கு காரணம் என்றும்,இது தொடர்பில் தொடர்ந்தும் கேள்வி எழுப்பும் போது ஏதாவது ஓர் நடவடிக்கை எடுப்பதாகவே சுகாதார அமைச்சர் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

போலி ஆவணங்களை தயாரித்து,மருந்துகளைக் கொண்டு வந்து,அதில் ஈடுபட்ட திருடர்களே சி.ஐ.டி க்கு முறைப்பாட்டை பதிவு செய்ய போகின்றனர் என்றும், எதிர்க்கட்சி இதுபோன்ற பிரச்சினைகளை முன்வைக்கும்போது,அவை பொய்யானவை என்று கூறுகின்றனர் என்றும்,

இது தொடர்பில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட போது,113 பேர் இந்நாட்டு மக்களை மரணப் படுக்கைக்குக் கொண்டு செல்லும் திருடர்களுடன் நின்றார்கள் என்றும்,தரமான,இலவச சுகாதார கட்டமைப்பை பாதுகாக்கவும்,மக்களை வாழ வைக்கவும்,மக்கள் பக்கமாக 73 பேர் நின்றதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நல்லாட்சியின் போது சேனக பிபிலேயின் இலவச சுகாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக மலிவு விலையில் மருந்துகளைப் பெறுவது சாத்தியமாக இருந்தாலும், தற்போதைய சுகாதார அமைச்சரின் கீழ் போலி மருந்துகள் மற்றும் தரம் குறைந்த மருந்துகளை கொண்டு வரும் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும்,எந்த அரசாங்கத்தின் கீழும் இவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்றும்,அவசர கொள்முதல் நிறுத்தப்பட்டதாகக் கூறுவது ஒரு பொய்யான ஏமாற்று என்றும்,இங்கு முழுக்க முழுக்க திருட்டே நடந்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தரக்குறைவான மருந்துப் பொருட்கள் பாவனையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எதிர்க்கட்சியில் இருந்து நிவாரணத் திட்டத்தை செயல்படுத்தவும்,இந்த மோசடிகளில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யோசனை தெரிவித்தார்.

இந்நிகழ்வில்,எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வலையொளி இணைப்பு-

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version