இரு ஜோடி தந்தை மகன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்

கேகாலை – தேவாலகம, புஸ்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டத்தில் காணமற்போயிருந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் இன்று (10/11) சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று (10/11) அதிகாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் காணாமற்போயிருந்தனர்.

தாய் மீட்கப்பட்டு கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதற்கமைய குறித்த இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குளியாப்பிட்டிய – பரணகம, விலபொல பகுதியில் தந்தை மற்றும் மகன் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் தந்தை இன்று (10/11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள 11 வயதுடைய மாணவர் நேற்று (09/11) பகுதிநேர வகுப்பை முடித்துவிட்டு தனது தந்தையுடன் வீடு திரும்பும் போது பரணகம ஓயாவில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இருவரும் தேடப்பட்டு வந்த நிலையில் தந்தை இன்று ஆற்றில் மிதந்துவந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு ஜோடி தந்தை மகன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்
Social Share
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version