உலககிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவானது நியூசிலாந்து

உலககிண்ண 20-20 தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவானது நியூசிலாந்து அணி. முதற் தடவையாக நியூசிலாந்து அணி 20-20 உலக கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இங்கிலாந்து அணி வெற்றி பெறும் வாய்ப்புகள் காணப்பட்ட போதும் ஜிம்மி நீஸாம், டர்யில் மிச்செல் ஆகியோரது அதிரடி துடுப்பாட்டம் நியூசிலாந்து அணியினை இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றது.

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றது. இதில் மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 51(37) ஓட்டங்களையும்,லியாம் லிவிங்ஸ்டன் 41(30) ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 29(24) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரிம் சவுதி, அடம் மில்ன், ஐஸ் சோதி, ஜிம்மி நீஸாம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றது. இதில் டர்யில் மிச்செல் ஆட்டமிழக்காமல் 72(47) ஓட்டங்களையும், டெவோன் கொன்வேய் 46(38) ஓட்டங்களையும், ஜிம்மி நீஸாம் 26(10) ஒட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக டர்யில் மிச்செல் தெரிவு செய்யப்பட்டார்.

நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது.

நாளை (11/11/2021) இரண்டாவது அரை இறுதிப் போட்டியாக அவுஸ்திரேலியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

உலககிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவானது நியூசிலாந்து
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version