பிரபல நடிகர் ஜக்சன் ஆண்டனி காலமானார்.

வாகன விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் ஜக்சன் அண்டனி தனது 65வது வயதில் இன்று (09.10) அதிகாலை காலமானதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

படப்பிடிப்பு ஒன்றில் பணியாற்றி வீடு திரும்பும்போது, மொரகொட பிரதேசத்தில் அவர் பயணித்த கெப் வண்டி யானை மீது மோதியதில் விபத்துக்குள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த நடிகர் ஜக்சன் அண்டனி மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார்.

நடிகராகவும், பாடலாசிரியராகவும், பாடகராகவும், எழுத்தாளராகவும், அறிவிப்பாளராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்திய அவர் நாட்டின் கலாச்சார வரலாற்றை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சென்றதுடன், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தியவராவார்.

அவரது பிரிவினால் துயருறும் உறவுகளுக்கு பலரும் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version