நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டி ஆரம்பித்துள்ளது.
இந்தியா, ஹைதராபாத் மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
நியூசிலாந்து அணி முதற் போட்டியில் மிகப்பெரிய வெற்றி ஒன்றை இங்கிலாந்து அணிக்கெதிராக பெற்ற நிலையில் இன்று களமிறங்குகிறது. நெதர்லாந்து அணி பாகிஸ்தான் அணியோடு தோல்வியை சந்தித்துள்ளது.
இன்று முதல் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஆரம்பிக்கின்றன.
அணி விபரம்
நியூசிலாந்து அணி: , டிரென்ட் போல்ட், மார்க் சப்மன், டெவோன் கொன்வே, லூக்கி பெர்குசன், மட் ஹென்றி, ரொம் லெதாம்(தலைவர்), டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர்
நெதர்லாந்து அணி: ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, போல் வான் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், ஆர்யன் டட், ரியான் க்ளீன், சைப்ரண்ட் ஏஞ்சல்பிரெக்ட்
புள்ளிப்பட்டியல்
| அணி | போ | வெ | தோ | ச | கை | புள் | ஓ.ச.வே |
| நியூசிலாந்து | 01 | 01 | 00 | 00 | 00 | 02 | 2.149 |
| தென்னாபிரிக்கா | 01 | 01 | 00 | 00 | 00 | 02 | 2.040 |
| பாகிஸ்தான் | 01 | 01 | 00 | 00 | 00 | 02 | 1.620 |
| பங்களாதேஷ் | 01 | 01 | 00 | 00 | 00 | 02 | 1.438 |
| இந்தியா | 01 | 01 | 00 | 00 | 00 | 02 | 0.883 |
| அவுஸ்திரேலியா | 01 | 00 | 01 | 00 | 00 | 00 | -0.883 |
| ஆப்கானிஸ்தான் | 01 | 00 | 01 | 00 | 00 | 00 | -1.438 |
| நெதர்லாந்து | 01 | 00 | 01 | 00 | 00 | 00 | -1.620 |
| இலங்கை | 01 | 00 | 01 | 00 | 00 | 00 | -2.040 |
| இங்கிலாந்து | 01 | 00 | 01 | 00 | 00 | 00 | -2.149 |
