நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்!

‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ வெற்றிக்குப் பிறகு தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக நடிகர் ஷாருக்கான் புகார் செய்ததை அடுத்து, மும்பை காவல்துறையால் ஷாருக்கானுக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

Y+ பாதுகாப்பின் கீழ், நடிகர் ஷாருக்கானுடன் 24 மணி நேரமும் ஆயுதமேந்திய ஆறு பாதுகாப்புப் பணியாளர்கள் இருப்பார்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்தடுத்து இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்த பின்னர் அவர் இவ்வாறான கொலை மிரட்டல்களை எதிர்கொள்ளவதாக முறைப்பாடு செய்ததையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த Y+ பாதுகாப்பிற்காக செலவாகும் தொகையை ஷாருக்கான் பொறுப்பேற்கவுள்ளார்.

டெல்லியை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர் விடுத்த கொலை மிரட்டல் காரணமாக நடிகர் சல்மான் கானுக்கு Y+ பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version