நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் நியூசிலாந்து பாரிய வெற்றி ஒன்றை பெற்றுள்ளது.
இந்தியா, ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 323 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் சகல விக்கெட்ளையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றது. இதில் கொலின் எக்கர்மன் ஓரளவு சிறப்பாக துடுப்பாடியுள்ளார். ஏனைய துடுப்பாட்ட வீரர்களும் ஓரளவு துடுப்பாடிய போதும் வெற்றி பெறக்கூடியளவுக்கு துடுப்பாடவில்லை.
மிட்செல் சென்டனர் மிக சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை தகர்த்துக்கொடுத்தார்.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி களத்தடுப்பைதெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 07 விக்கெட் இழப்பிற்கு 322 ஓட்டங்களை பெற்றது.
முன் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த இணைப்பாட்டங்களை வழங்கினார்கள். கடந்த போட்டியில் சிறப்பாக துடுப்பாடிய ரச்சின் ரவீந்திர இந்தப் போட்டியிலும் சிறப்பாக துடுப்பாடினார். கடந்த போட்டியில் சிறப்பாக துடுப்பாட தவறிய வில் ஜங் இந்தப் போட்டியில் நல்ல முறையில் துடுப்படினார்கள். முதல் ஐந்து துடுப்பாட்ட வீரர்கள் நல்ல முறையில் ஓட்டங்களை பெற அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது.
நியூசிலாந்து அணி அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் பெரிய வெற்றியினை பெற்று ஓட்ட நிகர சராசரி வேகத்தை மிகவும் அதிகரித்துள்ளது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| விக்ரம் சிங் | Boweld | மட் ஹென்றி | 12 | 20 | 1 | 0 |
| மக்ஸ் ஓ டொவ்ட் | L.B.W | மிட்செல் சென்ட்னர் | 16 | 31 | 2 | 0 |
| கொலின் அக்கர்மன் | பிடி – மட் ஹென்றி | மிட்செல் சென்ட்னர் | 69 | 73 | 5 | 0 |
| பஸ் டி லீட் | பிடி – டிரென்ட் போல்ட் | ரச்சின் ரவீந்திர | 18 | 25 | 3 | 0 |
| தேஜா நிடமனுரு | Run Out | 21 | 26 | 2 | 1 | |
| ஸ்கொட் எட்வேர்ட்ஸ் | பிடி – மிட்செல் சென்ட்னர் | மிட்செல் சென்ட்னர் | 30 | 27 | 2 | 1 |
| சைப்ரண்ட் ஏஞ்சல்பிரெக்ட் | பிடி – டெவோன் கொன்வே | மட் ஹென்றி | 19 | 23 | 3 | 0 |
| ரோலோஃப் வன் டெர் மேர்வ் | பிடி – மட் ஹென்றி | மிட்செல் சென்ட்னர் | 01 | 06 | 0 | 0 |
| ரியான் க்ளீன் | L.B.W | மிட்செல் சென்ட்னர் | 08 | 15 | 0 | 0 |
| ஆர்யன் டட் | Bowled | மட் ஹென்றி | 11 | 20 | 0 | 1 |
| போல் வான் மீகெரென் | 04 | 03 | 1 | 0 | ||
| உதிரிகள் | 04 | |||||
| ஓவர் 46.3 | விக்கெட் 10 | மொத்தம் | 223 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| டிரென்ட் போல்ட் | 08 | 00 | 34 | 00 |
| மட் ஹென்றி | 8.3 | 00 | 40 | 03 |
| மிட்செல் சென்ட்னர் | 10 | 00 | 59 | 05 |
| லூக்கி பெர்குசன் | 08 | 00 | 32 | 00 |
| ரச்சின் ரவீந்திர | 10 | 00 | 46 | 01 |
| கிளென் பிலிப்ஸ் | 02 | 00 | 11 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| டெவோன் கொன்வே | பிடி – பஸ் டி லீட் | ரோலோப் வன் டெர் மேர்வ் | 32 | 40 | 5 | 1 |
| வில் ஜங் | பிடி – பஸ் டி லீட் | போல் வான் மீகெரென் | 70 | 80 | 7 | 2 |
| ரச்சின் ரவீந்திர | பிடி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ் | ரோலோப் வன் டெர் மேர்வ் | 51 | 51 | 3 | 1 |
| டெரில் மிட்செல் | Bowled | போல் வான் மீகெரென் | 48 | 47 | 5 | 2 |
| ரொம் லதாம் | Stump- ஸ்கொட் எட்வேர்ட்ஸ் | ஆர்யன் டட் | 53 | 46 | 6 | 1 |
| கிளென் பிலிப்ஸ் | பிடி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ் | பஸ் டி லீட் | 04 | 04 | 1 | 0 |
| மார்க் சப்மன் | பிடி – ரோலோப் வன் டெர் மேர்வ் | ஆர்யன் டட் | 05 | 13 | 0 | 0 |
| மிட்செல் சென்ட்னர் | 36 | 17 | 3 | 2 | ||
| மட் ஹென்றி | 10 | 04 | 0 | 1 | ||
| உதிரிகள் | 13 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 07 | மொத்தம் | 322 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஆர்யன் டட் | 10 | 02 | 62 | 02 |
| ரியான் க்ளீன் | 07 | 01 | 41 | 00 |
| போல் வான் மீகெரென் | 09 | 00 | 59 | 02 |
| ரோலோப் வன் டெர் மேர்வ் | 09 | 00 | 56 | 02 |
| கொலின் அக்கர்மன் | 04 | 00 | 28 | 00 |
| பஸ் டி லீட் | 10 | 00 | 51 | 01 |
| விக்ரம் சிங் | 01 | 00 | 09 | 00 |
| அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
| நியூசிலாந்து | 02 | 01 | 00 | 00 | 04 | 1.958 |
| தென்னாபிரிக்கா | 01 | 01 | 00 | 00 | 02 | 2.040 |
| பாகிஸ்தான் | 01 | 01 | 00 | 00 | 02 | 1.620 |
| பங்களாதேஷ் | 01 | 01 | 00 | 00 | 02 | 1.438 |
| இந்தியா | 01 | 01 | 00 | 00 | 02 | 0.883 |
| அவுஸ்திரேலியா | 01 | 00 | 01 | 00 | 00 | -0.883 |
| ஆப்கானிஸ்தான் | 01 | 00 | 01 | 00 | 00 | -1.438 |
| நெதர்லாந்து | 02 | 00 | 02 | 00 | 00 | -1.800 |
| இலங்கை | 01 | 00 | 01 | 00 | 00 | -2.040 |
| இங்கிலாந்து | 01 | 00 | 01 | 00 | 00 | -2.149 |
அணி விபரம்
நியூசிலாந்து அணி: , டிரென்ட் போல்ட், மார்க் சப்மன், டெவோன் கொன்வே, லூக்கி பெர்குசன், மட் ஹென்றி, ரொம் லெதாம்(தலைவர்), டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர் , வில் ஜங்
நெதர்லாந்து அணி: ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, போல் வான் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், ஆர்யன் டட், ரியான் க்ளீன், சைப்ரண்ட் ஏஞ்சல்பிரெக்ட்
