விட்டதை பிடித்த இங்கிலாந்து

விட்டதை பிடித்த இங்கிலாந்து

இந்தியா, தர்மசாலா மைதானத்தில் நடைபெற்று பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் ஏழாவது போட்டியில் இங்கிலாந்து அணி பங்களாதேஷ் அணியுடன் 137 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணியுடன் இழந்த ஓட்ட நிகர சராசரி வேகத்தை இங்கிலாந்து அணி குறைத்துள்ளது.

365 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 227 ஓட்டங்களை பெற்றது. ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்த பங்களாதேஷ் அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட்களை இழந்து 49 ஓட்டங்கள் என்ற நிலையில் காணப்பட்டது. லிட்டன் டாஸ் ஓரளவு போராடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். முஸ்பிகியூர் ரஹீம் அரைச்சதம் பூர்த்தி செய்தார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ரீஸ் ரெப்லி சிறப்பாக பந்துவீசினார். கூடுதலான விக்கெட்களை கைப்பற்றிக்கொடுத்தார். கிரீஸ் வோக்ஸ் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதல் அதிரடி நிகழ்த்தி 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 364 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

டாவிட் மலான் அதிரடி நிகழ்த்தி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். ஆறாவது சதத்தை அவர் பூர்த்தி செய்தார். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம 115 ஓட்டங்கள். 17.5 ஓவர்களில் இது பெறப்பட்டது. ஜொனி பார்ஸ்டோவ், டாவிட் மாலன் இந்த எண்ணிக்கையினை பகிர்ந்தனர். இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக மலானுடன் இணைந்து ஜோ ரூட் 151 ஓட்டங்களை பகிர்ந்தார். இறுதி நேரத்திலேயே விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.

மெஹதி ஹசன் 4 விக்கெட்களையும், ஷொரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். இருப்பினும் இருவரும் ஓட்டங்களை அதிகமாகவே வழங்கினார்கள்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
லிட்டொன்  டாஸ்பிடி- ஜோஸ் பட்லர்கிறிஸ் வோக்ஸ்766672
ரன்ஷித் ஹசன் தமீம்Bowledரீஸ் ரொப்லி010200
நஜ்முல் ஹொசைன் சாண்டோபிடி- லியாம் லிவிங்ஸ்டன்ரீஸ் ரொப்லி000100
ஷகிப் அல் ஹசன்Bowledரீஸ் ரொப்லி010900
மெஹிதி ஹசன் மிராஸ்பிடி – ஜோஸ் பட்லர்கிறிஸ் வோக்ஸ்080710
முஷ்பிகுர் ரஹீம்பிடி- ஆடில் ரஷிட்ரீஸ் ரொப்லி516440
தௌஹித் ரிடோய்பிடி- ஜோஸ் பட்லர்லியாம் லிவிங்ஸ்டன்396120
மஹேதி ஹசன்Bowledஆடில் ரஷிட்143210
ரஸ்கின் அஹமட்Bowledசாம் கரன்152501
ஷொரிஃபுல் இஸ்லாம்Bowledமார்க் வூட்121420
முஸ்ரபைசூர் ரஹ்மான்  030900
உதிரிகள்  07   
ஓவர்  48.2விக்கெட்  10மொத்தம்227   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
கிறிஸ் வோக்ஸ்08004902
ரீஸ் ரொப்லி10014304
சாம் கரன்7.2004701
மார்க் வூட்10002901
ஆடில் ரஷிட்10004201
லியாம் லிவிங்ஸ்டன்03001301
     
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஜொனி பார்ஸ்டோவ்BOWLEDஷகிப் அல் ஹசன்525980
டாவிட் மலான்BOWLEDமஹேதி ஹசன்140107165
ஜோ ரூட்பிடி – முஷ்பிகுர் ரஹீம்ஷொரிஃபுல் இஸ்லாம்826881
ஜோஸ் பட்லர்BOWLEDஷொரிஃபுல் இஸ்லாம்201011
ஹரி புரூக்பிடி – லிட்டொன் டாஸ்மஹேதி ஹசன்201530
லியாம் லிவிங்ஸ்டன்BOWLEDஷொரிஃபுல் இஸ்லாம்000100
சாம் கரன்பிடி – நஜ்முல் ஹொசைன்மஹேதி ஹசன்111510
கிறிஸ் வோக்ஸ்பிடி – மஹேதி ஹசன்ரஸ்கின் அஹமட்141120
ஆடில் ரஷிட்பிடி – நஜ்முல் ஹொசைன்மஹேதி ஹசன்11710
மார்க் வூட்  060510
ரீஸ் ரொப்லி  10200
உதிரிகள்  07   
ஓவர்  50விக்கெட்  09மொத்தம்364   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
முஸ்ரபைசூர் ரஹ்மான்10007000
ரஸ்கின் அஹமட்06003801
ஷொரிஃபுல் இஸ்லாம்10007503
மஹேதி ஹசன்08007104
ஷகிப் அல் ஹசன்10005201
மெஹிதி ஹசன் மிராஸ்06005500
     
அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
நியூசிலாந்து02010000041.958
தென்னாபிரிக்கா01010000022.040
பாகிஸ்தான்01010000021.620
இந்தியா01010000020.883
இங்கிலாந்து01010000020.553
பங்களாதேஷ்0100010002-0.653
அவுஸ்திரேலியா0100010000-0.883
ஆப்கானிஸ்தான்0200010000-1.438
நெதர்லாந்து0100010000-1.800
இலங்கை0100010000-2.040

அணி விபரம்

பங்காளதேஷ் அணி: ஷகிப் அல் ஹசன் (தலைவர்), லிட்டொன் டாஸ், ரன்ஷித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ததௌஹித் ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், ஷேக் மஹேதி ஹசன், ரஸ்கின் அஹமட், முஸ்ரபைசூர் ரஹ்மான், ஷொரிஃபுல் இஸ்லாம்

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜோனி பார்ஸ்டோவ், ஹரி புரூக், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆடில் ரஷிட், ஜோ ரூட், ரீஸ் ரொப்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version