பண்டோரா விசாரணையின் தற்போதைய நிலை

பண்டோரா ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்த இலங்கையர் தொடர்பான விபரங்கள் மற்றும் அவர்களது கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவானது, விசாரணை செய்த அறிக்கைகளை ஜனாதிபதியிடம் விளக்கமளித்துள்ளது.

அந்தவகையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இதுவரை விசாரணை செய்யப்பட்ட தற்;போதைய நிலவரம் தொடர்பான ஆய்வு அறிக்கைகள் ஜனாதிபதியிடம் நேற்று (10/11) கையளிக்கப்பட்டுள்ளது.

பண்டோரா ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்த இலங்கையர்கள் மற்றும் அவர்களது கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை செய்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும் என ஜனாதிபதி முன்னராக பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கமைய கடந்த மாதம் 6ஆம் திகதியன்று ஜனாதிபதி சட்டப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் W.K.D விஜயரத்னவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளிக்கும் வகையில், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கடந்த 8ஆம் திகதி அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தார். அதில் பண்டோரா ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த திருக்குமார் நடேசனின் வங்கி கணக்கு அடங்கிய விபரங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் கோரப்பட்டுள்ளதாகவும், அவை கிடைக்கப்பெற்றதன் பின்னர் முழுமையாக அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் விசாரணைகள் இதுவரை முடிவடையாத நிலையில் அவற்றை உரிய வகையில் நிறைவு செய்து இறுதி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என்றும் W.K.D விஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

பண்டோரா விசாரணையின் தற்போதைய நிலை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version