உள்நாட்டில் இடம்பெற்ற கடந்த கால யுத்தங்களின் போது நாட்டை விட்டு வெளியேறி புலம்பெயர் இலங்கை பிரஜைகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கி, வாக்களிப்பதற்கான வாய்ப்பினை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (10/11) பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் அந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அவர் தொடர்ந்துரையாற்றுகையில், இரட்டை குடியுரிமைகளை பெறுவதற்கு உரிமையிருந்தும் அதற்காக ஆர்வம் காட்டி வரும் வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் மக்கள், அதற்காக அதிக தொகையை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்த அவர், ஆகையால் இலங்கை அரசாங்கம் இந்த பிரச்சினையில் தலையிட்டு அதற்கான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை புலம்பெயர் மக்களுக்கு வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தபால் மூலமாகவேனும் அவர்கள் வாக்களிப்பதற்கு அரசாங்கம் அதுதொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.