ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த ஆரம்பத்தை கட்டுப்படுத்திய இந்தியா

உலகக்கிண்ண தொடரின் ஒன்பதாவது போட்டி இந்தியா, மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் டெல்லி, அருண்ஜட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்து. 13.1 ஓவர்களில் 63 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்கள் என்ற நிலையில் ஜோடி சேர்ந்த ஹஸ்மதுல்லா ஷஹீதி, அஷ்மதுல்லா ஓமர்ஷாய் ஆகியோரின் சத இணைப்பாட்டம் ஆபாகனிஸ்தான் அணிக்கு பலமாக அமைந்தது. இந்தியா அணிக்கு எதிர்பாராத தலையிடியாக இது மாறியது. முதல் மூன்று விக்கெட்களும் வேகப்பந்து வீச்சாளர்களினால் வீழ்த்தப்பட்டன. சுழற்பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பை இந்த ஜோடி தகர்த்தது. ஹார்டிக் பாண்ட்யா 121 ஓட்ட இணைப்பாட்டத்தை முறியடித்தார். சிறப்பாக துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ஹஸ்மதுல்லா ஷஹீதி 80 ஓட்டங்ளை பெற்ற நிலையில் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.4

ஜஸ்பிரிட் பும்ரா இறுதி நேரத்தில் விக்கெட்களை தகர்க்க ஆபகானிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.

துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதக தன்மையான மைதானத்தில் இந்த ஓட்ட எண்ணிக்கையினை துரத்தியடித்து பெறுவது பலமான இந்தியா அணிக்கு கடினமாக அமையாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மைதானத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் கூடுதலான மொத்த ஓட்ட எண்ணிக்கை, ஒரு அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை, வேகமான சதம் ஆகிய உலகக்கிண்ண சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் இந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. வேகப்பந்து வீச்சாளர் மேலதிகமாக தேவை என்ற நிலையில் ரவிச்சந்திரன் அஷ்வின் நீக்கப்பட்டு ஷர்டூல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரஹ்மனுல்லா குர்பாஸ்பிடி- ஷர்டூல் தாகூர்ஹார்டிக் பாண்ட்யா212831
இப்ராஹிம் ஷர்டான்பிடி- லோகேஷ் ராகுல்ஜஸ்பிரிட் பும்ரா222840
ரஹ்மத் ஷாL.B.Wஷர்டூல் தாகூர்162230
ஹஷ்மதுல்லா ஷஹிதிL.B.Wகுல்தீப் யாதவ்808881
அஸ்மதுல்லா ஓமர்சாய்Bowledஹார்டிக் பாண்ட்யா626924
மொஹமட் நபிL.B.Wஜஸ்பிரிட் பும்ரா192710
நஜிபுல்லா ஷர்டான்பிடி- விராத் கோலிஜஸ்பிரிட் பும்ரா020800
ரஷீட் கான்பிடி- குல்தீப் யாதவ்ஜஸ்பிரிட் பும்ரா161211
முஜீப் உர் ரஹ்மான்  101320
நவீன் உல் ஹக்  090810
பஷால்ஹக் பரூக்கி          
உதிரிகள்  16   
ஓவர்  50விக்கெட்  08மொத்தம்272   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஜஸ்பிரிட் பும்ரா10003904
மொஹமட் சிராஜ்09007600
ஹார்டிக் பாண்ட்யா07004302
ஷர்டூல் தாகூர்06003101
குல்தீப் யாதவ்10004001
ரவீந்தர் ஜடேஜா08003800
     

அணி விபரம்

ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், ரஹ்மத் ஷா சுர்மதி, நஜிபுல்லா ஷர்டான், மொஹமட் நபி , எய்சகில், அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், அஹமட் லகன்வாய், நவீன் உல் ஹக் முரீத், பஷால்ஹக் பரூக்கி

இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், இஷன் கிஷன், ஷர்டூல் தாகூர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version