கொழும்பில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் தொடர்பில் புதிய தீர்மானம்!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள 300 இற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கும் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும் மரங்கள் இனங்காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர பகுதிகளுக்குள் 100,000 க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் உள்ளதாகவும், அவற்றில் 300 மரங்கள் மக்களுக்கு அல்லது சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த அச்சுறுத்தல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழு, அது தொடர்பில் மதிப்பீடு செய்து அறிக்கையை வழங்கும் எனவும், அதன் பின்னர் மரங்களின் ஆபத்தான கிளைகளை அகற்றுவதா, அல்லது மரங்களை முழுமையாக அகற்றுவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை தொடர்பில் தேசிய தாவரவியல் பூங்கா மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் போன்றவற்றின் தொழில்நுட்ப உதவியைப் பெறவும், சிங்கப்பூர் போன்ற நாடுகள் புறநகர்ப் பகுதிகளில் விழும் அபாயத்தில் உள்ள மரங்களைக் கண்டறியும் தொழில்நுட்ப முறைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் அதிகாரிக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க நீண்ட கால தீர்வைத் தயாரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version