இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸின் அனைத்து உறுப்பினர்களையும் கொன்று காசாவில் இருந்து ஹமாஸை ஒழிப்பதாக உறுதியளித்துள்ளார்.
இஸ்ரேலிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் காஜி பகுதியின் பயங்கரவாதிகள் எனவும், அவர்களுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே வேறுபாடு இல்லை எனவும், உலகம் ஐ.எஸ். அமைப்பை அழித்தது போல் நாமும் அழிப்போம் எனவும், ஹமாஸ் அமைச்சு நிச்சயம் இறக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, ஹமாஸ் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான பென்னி காண்ட்ஸ் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் ஒத்துழைப்புடன் பிரதமர் நெதன்யாகு இதற்காக புதிய ஐக்கிய அரசாங்கம் ஒன்றையும் அமைத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.