இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பொன் செல்வராசா இன்று (13.10) காலமானார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்குத் தெரிவான இவர், மக்களுக்காக பல சேவையாற்றியுள்ளார்.
மூத்த தமிழ் அரசியல்வாதியான இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.