நியூசிலாந்து எதிர் பங்களாதேஷ் உலகக்கிண்ண போட்டி ஆரம்பம்

உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்றின் மூன்றாம் கட்டம்.  நியூசிலாந்து எதிர் பங்களாதேஷ். World Cup 2023

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினோராவது போட்டி ஆரம்பித்துள்ளது. முதல் சுற்றின் மூன்றாம் கட்டப் போட்டிகள் இன்று முதல் ஆரம்பிக்கின்றன. சகல அணிகளும் தலா இரண்டு போட்டிகளை நிறைவு செய்துள்ளன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

நியூசிலாந்து அணி இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் வெற்றி பெற்று இங்கிலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமைப் பொறுப்போடு விளையாடுகின்றார்.

அணி விபரம்

பங்காளதேஷ் அணி: ஷகிப் அல் ஹசன் (தலைவர்), லிட்டொன் டாஸ், ரன்ஷித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ததௌஹித் ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹ்மதுல்லா, ரஸ்கின் அஹமட், முஸ்ரபைசூர் ரஹ்மான், ஷொரிஃபுல் இஸ்லாம்

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன்(தலைவர்), டிரென்ட் போல்ட், மார்க் சப்மன், டெவோன் கொன்வே, லூக்கி பெர்குசன், மட் ஹென்றி, ரொம் லெதாம், டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர்

புள்ளிப்பட்டியல்

அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
தென்னாபிரிக்கா02020000042.360
நியூசிலாந்து02020000041.958
இந்தியா02020000041.500
பாகிஸ்தான்02020000040.927
இங்கிலாந்து02010100020.553
பங்களாதேஷ்0201010002-0.653
இலங்கை0200020000-1.161
நெதர்லாந்து0200020000-1.800
அவுஸ்திரேலியா0200020000-1.846
ஆப்கானிஸ்தான்0200020000-1.907
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version