லெபனான் மற்றும் சிரியாவை அண்மித்துள்ள வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
லெபனான் மற்றும் சிரியாவுக்கு அருகில் உள்ள நஹாரியா, அக்கோ, ஹைஃபா, திபெரியாஸ், நசரேத் ஆகிய கிராமங்களுக்கு அருகில் தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகமானது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு, கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், மருந்து மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் அரசாங்கம் அந்த பகுதிகளுக்கு பாதுகாப்பு படையினரை அனுப்பி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
காஸா பகுதியின் வடக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களை தெற்குப் பகுதிகளுக்கு வெளியேற்ற இஸ்ரேல் அரசு 24 மணிநேர அவகாசம் அளித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.