இன்று எமது நாட்டில் தொழில் முனைவோர், நுண்,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு மறக்க முடியாத ஓர் சந்தர்ப்பமாகும் என்றும்,எமது நாட்டின் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் உட்பட சகல அதிகாரிகளும் நுண்,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் நலனுக்காக அதிக பக்கபலத்தை வழங்குகின்றனர் என்றும்,எமது நாட்டிலுள்ள நுண்,சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் டொலர்களை எமது நாட்டிக்கு வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிதி National Credit Guarantee Institution ஊடாக நமது நாட்டின் வங்கி கட்டமைப்பில் 13 வங்கிகள் மூலம் மூலதனமாக வழங்கப்படுகிறது என்றும்,இதன் ஊடாக இலங்கையிலுள்ள நுண்,சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினருக்கான கடன் உத்தரவாதத் திட்டம் மற்றும் சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இதன் ஊடாக முடிந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று (13.10) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் மற்றும் நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.இச்சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இந்நிதித் தொகையை வழங்கவுள்ளதாக தெரிவித்தனர்.
குறைந்த அரசாங்க வருவாய் மற்றும் சரியான நிதி முகாமை இல்லாது ஒரு நாடு முன்னேற முடியாது என்றும்,ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அதிக வருமானம் ஈட்டப்பட வேண்டும் என்றாலும்,தற்போதைய அரசாங்கம் வரி அதிகரிப்பு மூலம் அரசாங்க வருவாயை அதிகரிக்க முயற்சித்தாலும்,
பொருளாதாரத்தை சுருக்குவதன் மூலம் அதைச் செய்ய முடியாது என்றும்,அரச வருவாயை அதிகரிக்க பொருளாதாரத்தை விரிவடையச் செய்ய வேண்டும் என்றும்,நுண்,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் கிட்டத்தட்ட 50 சதவீத பங்களிப்பை இதற்கு வழங்குகிறார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
இந்நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர வர்த்தக சமூகத்தினரை மீன்டெழச் செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள்;முன்னெப்போதும் இல்லாத வகையில், போராடி வரும் நுண்,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் எதிர்கொள்ளும் நீண்ட கால சவால்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தீர்வு காண நடைமுறையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்று தெரிவித்தனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ஒரு திருப்புமுனை வாய்ந்த உரையாடலுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம்,எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் தற்போதுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர் என்றும்,இந்த மூலோபாய முன்முயற்சியானது, பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தலைவரின் அர்ப்பணிப்பை மட்டும் எடுத்துக்காட்டாது முன்னணி நிதி நிறுவனங்களிடமிருந்து தேவையான தீர்வுகள் மற்றும் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியையும் இது காண்பிக்கிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த செயல்பாட்டில்,
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினர் வகிக்கும் முக்கிய பங்களிப்பை அடையாளம் கண்டு,
அத்துறையின் மறுமலர்ச்சிக்கு தேவையான பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் இது ஒரு தீர்க்கமான படியைக் குறித்துக் காட்டுவதாக பாராட்டும் விதமாக அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் பல தடவைகள்,ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள் மற்றும் நுண்,சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்பாடு செய்தார் என்பதோடு,அவர்களது பிரச்சினைகளை எடுத்துரைக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.
கடந்த அரசாங்கங்களின் போது ஆளும் தரப்பு அமைச்சர்களுக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்த போதிலும்,முதல் முறையாக,
சாதாரண மக்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் பிரச்சினைகளை நேரடியாக ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் நேரடியாகச் சொல்லும் அரிய வாய்ப்பு கிடைத்த தருணம் இதுவாகும்.
இந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது நேரடி ஒருங்கிணைப்பின் கீழ் பல கட்டங்களாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பிரதிநிதிகளை நுண்,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் மற்றும் வர்த்தகர்கள் நேருக்கு நேர் சந்தித்த கலந்துரையாடியதன் விளைவாக,இந்த 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகை நுண்,சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கிடைக்கப்பெற்றமை சிறப்பம்சமாகும்.
இத்தொகை டிசம்பர் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கப் பெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை பணிப்பாளர் Takafumi Kadono அவர்களும்,Santosh Pokharel (Unit head, Private Sector Development) அவர்களும், நிதி ஆய்வாளர் திருமதி.Uresha T. Walpitagama ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
வலையொளி இணைப்பு-