
ஆபகானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இந்தியா டெல்லியில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண தொடரின் பதின்மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்த்தான் அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 284 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை இங்கிலாந்து அணி தெரிவு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹுமனுள்ள குர்பாஸ் சிறந்த அதிரடி ஆரம்பத்தை வழங்கினார். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 16.4 ஓவர்களில் 114. இப்ராஹிம் ஷர்டான் 28 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். குர்பாஸ் மூன்றாவது விக்கெட்டாக 57 பந்துகளில் 80 ஓட்டங்களை பெற்று ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னரே இங்கிலாந்து அணி பக்கமாக போட்டி மாறியது. இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை கைப்பற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு தடுமாற்றம் ஆரம்பித்தது.
மத்தியவரிசை பெரியளவில் சோபிக்கவில்லை. இறுதி நேரத்தில் களமிறங்கிய ரஷீட் கான் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையை சிறிதளவில் உயர்திக் கொடுத்து ஆட்டமிழந்ததை தொடர்ந்து துடுப்பாட வந்த முஜீப் உர் ரஹ்மான் ஓட்டங்களைக்குவித்து ஆப்கானிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்திக் கொடுத்தார். இக்ரம் அலிகில் நிதானமாகவும், அதிரடியாகவும் துடுப்பாடி அவருடைய அரைச்சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். இறுதி நேரத்தில் பின் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக துடுப்பாடி ஆப்கானிஸ்தான் அணிக்கு வலுவான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக் கொடுத்தனர்.
இந்த ஓட்ட எண்ணிக்கையினை இங்கிலாந்து இலகுவாக பெற முடியாது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரஹ்மனுல்லா குர்பாஸ் | Run Out | 80 | 57 | 8 | 4 | |
| இப்ராஹிம் ஷர்டான் | பிடி – ஜோ ரூட் | ஆடில் ரஷிட் | 28 | 48 | 3 | 0 |
| ரஹ்மத் ஷா | Stump – ஜோஸ் பட்லர் | ஆடில் ரஷிட் | 03 | 08 | 0 | 0 |
| ஹஷ்மதுல்லா ஷஹிதி | Bowled | ஜோ ரூட் | 14 | 36 | 0 | 0 |
| அஸ்மதுல்லா ஓமர்சாய் | பிடி – கிறிஸ் வோக்ஸ் | லியாம் லிவிங்ஸ்டன் | 19 | 24 | 1 | 1 |
| இக்ரம் அலிகில் | பிடி – சாம் கரன் | ரீஸ் ரொப்லி | 58 | 66 | 3 | 2 |
| மொஹமட் நபி | பிடி – ஜோ ரூட் | மார்க் வூட் | 09 | 15 | 1 | 0 |
| ரஷீட் கான் | பிடி – ஜோ ரூட் | ஆடில் ரஷிட் | 23 | 22 | 3 | 0 |
| முஜீப் உர் ரஹ்மான் | பிடி – ஜோ ரூட் | மார்க் வூட் | 28 | 60 | 3 | 1 |
| நவீன் உல் ஹக் | Run Out | 05 | 06 | 1 | 0 | |
| பஷால்ஹக் பரூக்கி | 02 | 04 | 0 | 0 | ||
| உதிரிகள் | 15 | |||||
| ஓவர் 49.5 | விக்கெட் 10 | மொத்தம் | 284 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| கிறிஸ் வோக்ஸ் | 04 | 00 | 41 | 00 |
| ரீஸ் ரொப்லி | 8.5 | 01 | 52 | 01 |
| சாம் கரன் | 04 | 00 | 46 | 00 |
| ஆடில் ரஷிட் | 10 | 01 | 42 | 03 |
| மார்க் வூட் | 09 | 00 | 50 | 02 |
| லியாம் லிவிங்ஸ்டன் | 10 | 00 | 33 | 01 |
| ஜோ ரூட் | 04 | 00 | 19 | 01 |