ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைவதை தடுக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேயாலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டார், ஜோர்தான், பஹரைன், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்குச் சென்ற தற்போது இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தரை மற்றும் வான்வழியாக காஸா பகுதியில் கடும் தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதன் பின்னணியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் விஜயம் விசேடமானது என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.