இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதின்நான்காவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை செய்தது.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் குஷல் பெரேரா, பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் மிகவும் சிறப்பாக துடுப்பாடி 125 ஓட்டங்களை 21.4 ஓவர்களில் இணைப்பாட்டமாக வழங்கினார்கள். இலங்கை அணி 300 ஓட்டங்களை தாண்டுமென எதிர்பார்க்க 41 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்கள் வீழ்ந்தன. இதில் 9 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்களை வீழ்த்தப்பட்டன.
குஷல் பெரேரா போர்முக்கு திரும்பி அரைச்சதம் பூர்த்தி செய்தமை இலங்கைக்கு சாதகமான நிலைமை. கடந்த போட்டிகளில் மிகவும் சிறப்பாக துடுப்பாடிய குஷல் மென்டிஸ் தலைமை பொறுப்பை ஏற்ற நிலையில் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
32.1 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் மழை காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பித்து 3 பந்துகளில் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழந்தார். 21 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. இவ்வாறான சிறந்த ஆரம்பத்தை இலங்கை அணியால் மட்டுமே சொதப்ப முடியும். 32 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்கள் வீழ்ந்தன. ஏழாவது விக்கெட் வீழ்த்தப்படும் போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 196. 39 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. மேலும் 03 ஓட்டங்கள் பெறப்பட்ட நிலையில் எட்டாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது.
முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டதிலிருந்து 84 ஓட்டங்களுக்குள் 10 விக்கெட்களும், இரண்டாவது விக்கெட் வீழ்த்தப்பட்டதிலிருந்து 52 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன.
தஸூன் சாணகவுக்கு பதிலாக அணிக்குள் கொண்டுவரப்பட்ட சாமிக்க கருணாரட்ன பெற்றது 02 ஓட்டங்கள்.
நீண்ட இணைப்பாட்டம் ஒன்றின் பின்னர் இலங்கை அணி இவ்வாறு விக்கெட்களை அடுத்தடுத்து இழப்பது ஒன்றும் புதிதல்ல. இதனை யாரும் கணக்கிலெடுத்து திருத்துவதாக இல்லை. நின்று நிலைத்து துடுப்பாட முடியாதவர்களாகவே இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் காணப்படுகின்றனர்.
சிறப்பாக துடுப்பாடிய குஷல் மென்டிஸின் தலையில் தலைமை பொறுப்பை கட்டி அவரது துடுப்பாட்டத்தையும் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சு கூறுமளவுக்கு பெரிதாக அச்சுறுத்தும் அளவில் இருக்கவில்லை. இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தங்களாகவே ஆட்டமிழந்தார்கள் என்று சொல்லுமளவிலேயே காணப்பட்டது. விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட பின்னர் அடம் ஷம்பா அச்சுறுத்திய பந்துவீச்சாளராக மாறினார்.
தஸூன் சாணக்க உபாதையடைந்த நிலையில் குஷல் மென்டிஸ் இலங்கை அணியின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். தஸூன் சாணக இல்லாத நிலையில் சாமிக்க கருணாரட்ன இன்று விளையாடுகிறார். மதீஷ பத்திரனவுக்கு பதிலாக லஹிரு குமார விளையாடுகிறார்.
இரு அணிகளும் விளையாடிய முதல் சுற்றின் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளன. இவ்வாறான நிலையில் இன்றைய போட்டி விறு விறுப்பானதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
பத்தும் நிஸ்ஸங்க | பிடி- டேவிட் வோர்னர் | பட் கம்மின்ஸ் | 61 | 67 | 8 | 0 |
குசல் பெரேரா | Bowled | பட் கம்மின்ஸ் | 78 | 82 | 12 | 0 |
குஷல் மென்டிஸ் | பிடி- டேவிட் வோர்னர் | அடம் ஷம்பா | 09 | 13 | 0 | 0 |
சதீர சமரவிக்ரம | L.B.W | அடம் ஷம்பா | 08 | 07 | 1 | 0 |
சரித் அசலங்க | பிடி- | க்ளன் மக்ஸ்வெல் | 27 | 39 | 0 | 1 |
தனஞ்சய டி சில்வா | Bowled | மிட்செல் ஸ்டார்க் | 07 | 13 | 1 | 0 |
டுனித் வெல்லாளகே | Run Out | 02 | 09 | 0 | 0 | |
சாமிக்க கருணாரட்ன | L.B.W | அடம் ஷம்பா | 02 | 11 | 0 | 0 |
மஹீஸ் தீக்ஷண | L.B.W | அடம் ஷம்பா | 00 | 05 | 0 | 0 |
லஹிரு குமார | Bowled | மிட்செல் ஸ்டார்க் | 04 | 08 | 1 | 0 |
டில்ஷான் மதுஷங்க | 00 | 06 | 0 | 0 | ||
உதிரிகள் | 13 | |||||
ஓவர் 43.3 | விக்கெட் 10 | மொத்தம் | 209 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
மிட்செல் ஸ்டார்க் | 10 | 00 | 43 | 02 |
ஜோஸ் ஹெஸல்வூட் | 07 | 01 | 36 | 00 |
பட் கம்மின்ஸ் | 07 | 00 | 32 | 02 |
க்ளன் மக்ஸ்வெல் | 9.3 | 00 | 36 | 01 |
அடம் ஷம்பா | 08 | 01 | 47 | 04 |
மார்க்ஸ் ஸ்ரோய்னிஸ் | 02 | 00 | 11 | 00 |
அணி விபரம்
அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், ஸ்டீவன் ஸ்மித்., மார்னஸ் லபுஷேன், மிற்செல் மார்ஷ், க்ளன் மக்ஸ்வெல், மார்க்ஸ் ஸ்ரோய்னிஸ், ஜோஷ் இங்கிலிஸ் ,மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா
இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), , குசல் பெரேரா, பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, டுனித் வெல்லாளகே,மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, லஹிரு குமார, சாமிக்க கருணாரட்ன