வீடொன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்பு – கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி, பெரியபரந்தன் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் நேற்று (16.10) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளில் இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

17 வயதான சுரேஷ் குமார் தணிகே மற்றும் லோகேஸ்வரன் தமிழினி ஆகிய இரு சிறுமிகளே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இது தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில குறித்த சிறுமிகள் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

“எங்கள் மரணத்திற்கு யாரும் காரணமில்லை, நாங்கள் வாழ விரும்பாததால் இந்த முடிவை எடுத்தோம். இது எங்கள் முடிவு. யாரும் எங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நாங்கள் எங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் மிகவும் நேசிக்கிறோம். மன்னிக்கவும்”. என எழுதப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version