காஸா வைத்தியசாலை மீது தாக்குதல் – 500 பேர் பலி!

காஸா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்று பயங்கர வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கொடூர தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹமாஸ் ஆயுத குழுவுக்கு எதிரான போர் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னதாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் நோயாளிகள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஈரான், துருக்கி உள்ளிட்ட அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், குறித்த தாக்குதல் கொடூரமான குற்றம் எனவும், இனப்படுகொலை எனவும் பலஸ்தீன பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகள் இதனை பொறுப்பேற்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version