இலங்கை வளர்முக அணிக்கும், பங்களாதேஷ் வளர்முக அணிக்குமிடையில் தம்புள்ளை, ரங்கிரி மைதானத்தில் நேற்று(17.10) நடைபெற்ற 50 ஓவர்கள் போட்டியில் இலங்கை வளர்முக அணி டக்வேர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் இலங்கை வளர்முக அணி துடுப்பாடியது. 48.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 245 ஓட்டங்களை பெற்றது. மழை காரணமாக அத்தோடு இலங்கை அணியின் துடுப்பாட்டம் நிறைவுக்கு வந்தது. 47 ஓவர்கள் போட்டியாக போட்டி மாற்றப்பட்டது. பங்களாதேஷ் அணிக்கு 252 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்து. பங்களாதேஷ் அணி 38 ஓவர்களில் 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் மொஹமட் ஷமாஷ் 62 ஓட்டங்களை பெற்றார். 22 வயதான இவர் கொழும்பு ஷாஹிரா கல்லூரி பழைய மாணவன். மூர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்காக விளையாடி வருகிறார். இவர் விக்கெட்ட காப்பாளரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் ஆவார். நவோட் பரணவித்தாரன 66 ஓட்டங்களையும், அஹான் விக்ரமசிங்க ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரிப்போன் மன்டோல் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் அப்துல்லா அல் மமுன் 64 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணியின் பந்துவீச்சில் அஷியன் டானியல் 4 விக்கெட்களை கைப்பற்றினார். எஷான் மலிங்க 3 விக்கெட்ளை கைப்பற்றினார். வியாஸ்காந்த் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
மூன்று போட்டிகளடங்கிய தொடரில் இலங்கை வளர்முக அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.