சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள புதிய சந்தாதாரர்களிடமிருந்து ஆண்டுக்கு ஒரு டாலர் வசூலிக்க “X” நிறுவனம் தீர்மானித்துள்ளது.
பணம் செலுத்தாத சந்தாதாரர்கள் செய்திகளைப் படிக்கவும், வீடியோக்களைப் பார்க்கவும் மற்றும் பிற கணக்குகளைப் பின்தொடரவும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், X, நெட்வொர்க் அறிமுகப்படுத்திய முக்கிய அம்சங்களை அணுக அனுமதிகைப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி கணக்குகள், போட் செயல்பாடுகளை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக X நிறுவனம் தெரிவித்துள்ளது.