காஸா பகுதியில் சிக்கியுள்ள பலஸ்தீனர்களுக்கு நாளை (20.10) மனிதாபிமான ரீதியில் உதவிகளை அனுப்ப முடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்காக ‘ரஃபா’ நுழைவாயிலை திறக்க எகிப்து அதிகாரிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுமார் 13 நாட்களுக்கு முன்பு ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலின் பல குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தி அங்கு ஏராளமான மக்களை கொன்றனர் அதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் ஆரம்பித்திருந்தது.
இந்த போரின் காரணமாக இதுவரையில் இரு தரப்பிலும் 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.