பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தொடர்பில் சபாநாயகர் எடுத்த முடிவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும இன்று முதல் நான்கு வாரங்களுக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இது தொடர்பில் இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இன்று(19.10) காலை பாராளுமன்ற அமர்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் மன்னப்பெரும அநாகரீகமாக நடந்து கொண்டதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மானப்பெரும எழுப்பிய கேள்விக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பதிலளிக்க மறுத்ததையடுத்து பாராளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சபாநாயகர் பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version