மயிலாடுதுறை பிக்குவின் அடாவடி. ஜனாதிபதி, சாணக்கியன் MP ஆகியோருக்கு எதிராக விசனம்.

மட்டக்களப்பு மயிலாடுதுறை விகாரை கட்டுமானப்பணிகள் ஜனாதிபதியின் கட்டளையை தொடர்ந்து நிறுத்தப்பட்டது. அங்கே அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையும் அகற்றப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் அந்த விகாரைக்கு செல்ல முற்பட்ட சர்ச்சைக்குரிய பிக்கு பொலிஸ் உத்தோயோகஸ்தரினால் தடுக்கப்பட்டார். அதன் போது குறித்த பிக்கு கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டார்.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்களை அகற்றுமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில் அங்கு இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகஸ்தருக்கும், பிக்குவுக்குமிடையிலான சம்பாசனை தமிழில்

“விகாரைக்கு செல்ல வேண்டாம் என எப்படி சொல்வீர்கள்? எனக்கு செல்ல வேண்டும். இந்த ஆடைக்கு மரியாதை கொடுங்கள். நான் விகாரைக்கு செல்ல வேண்டும்.

பொலிஸ் – நாங்கள் உங்கள் ஆடைக்கு மதிப்பளிக்கிறோம், எனினும் இப்போது விகாரைக்கு செல்ல வேண்டாம். அங்கு ஒரு சிக்கல் இருக்கிறது.

பிக்கு – என்ன சிக்கல்?

பொலிஸ் – அது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்..

பிக்கு – ஏன் ராணுவம் புத்தர் சிலையை திருட போகிறதா? சாணக்கியனின் ஆணைக்கும், ஜனாதிபதியின் தீர்ப்புக்கும் அடிபணிந்து சிங்கள விகாரையை மூடி, புத்தர் சிலை எடுத்து செல்கிறார்கள். இதை செய்வதற்கு கீழ்த்தரமான செயல்களை செய்யலாம். நாட்டிற்கு சொல்வோம், இவர்கள் செய்வதை. இனக்குழு கிழக்கிற்கு எதுவும் செய்ய முடியாது. இது நல்ல கதை

பொலிஸ் – விவசாயிகள் செல்கிறார்கள் நீங்களும் செல்லலாம். ஆனால் விகாரைக்கு அல்ல.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version